இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

தோனியின் தலைமை தள்ளாடுகிறதா ? உலககோப்பை முண்ணோட்டம்


இந்தியாவின் மிகச்சிறந்த  கிரிக்கெட் கேப்டன் தோனியின் கீழ் நமது இந்திய  அணி நிறைய சாதனைகளை புரிந்துள்ளது அச்சாதனைகளின் மணிமகுடமாக 2011 வேர்ல்ட் கப் வென்று சாதித்தது.  இந்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் நமது அணியின் செயல்பாட்டினை உற்று நோக்கினால் எங்களது அணியின் மீது எதிர்பார்ப்பினை வைக்காதீர்கள் என நமது அணி வீரர்கள்  ரசிகர்களாகிய நம்மை தயார் செய்வது போலவே உள்ளது .

சென்ற உலக கோப்பையில் சொல்லியடித்த தோணி 

2011  சொந்த மண்ணில் இந்திய அணி தோணியில் தலைமையில் உலக கோப்பையில் துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் அணியாக வெற்றி வாகை சூடியது அனைவரும் அறிந்ததே!
ஆனால் தற்போது வேகப் பந்து ஆடுகளங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா மற்றும் Newzealand மைதானங்களில் நமது அணியின் வீரர்கள் மீண்டும் வெல்வார்களா என்ற ஐயம் நாம் அனைவருக்கும் துவக்கம் முதலே இருந்தது .
ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் தோணி மற்றும் நமது அணியின் செயல் பாடு நமது எதிர்பார்ப்பினை  விட மோசமாக உள்ளது .

எப்போதும் ஆடுகளத்தினில்  கூலாக செயல்பட்டு கேப்டன் கூல் (captain cool) என்று அழைக்கப்படும் தோனியின் செயல்பாடு நேற்றைய இங்கிலாந்து அணியினருக்கு எதிரான போட்டியில் தனது கோப முகத்தை அவர் வெளிபடுத்திய விதம், நிச்சயம்   நமது அணிக்கு  நல்ல செய்தியல்ல.




துல்லியமாக வீசும் வேகபந்துவீச்சாளர்கள் இல்லை என்ற குறைகளை தோனிக்கு அதரவாக கூறினாலும் , எப்போதுமே நமது அணி பேட்டிங்கை மட்டுமே நம்பியுள்ள அணியாக உள்ளது . ஆனால் தற்போது நமது பேட்டிங்கும் சொதப்புவதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தோனியின் செயல் பாட்டினை பார்க்கும் பொது நமது  தோனி அணித்தேர்வில் தெளிவான முடிவின்றி தடுமாறுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

நமது அணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருவதால் மற்ற அணிகளை விட ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் போதுமான அனுபவத்தை  பெற்றுள்ளது நமது அணிக்கு உலகக் கோப்பை போட்டிகளில் கண்டிப்பாக உதவும்.  மேலும் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் செய்த செய்த தவறுகளை திருத்திக் கொண்டு ஒரு  சாம்பியன் அணியைப் போன்று விளையாடும் என்று நம்புவோம் .

உலக கோப்பை போன்ற அதி முக்கிய போட்டிகளில் தோனியின் செயல்பாடு எப்போதுமே மிகவும் சிறப்பாகவே இருந்துள்ளதை நம்பி நாமும் தோணி தலைமையிலான நமது இந்திய அணியை உலகக் கோப்பையை வென்று வர  வாழ்த்துவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக