இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 பிப்ரவரி, 2015

என்னை அறிந்தால் சூப்பரா!? சொதப்பலா!?

என்னை அறிந்தால் பொங்கல் பட ரேசில் இருந்து பின் வாங்கியது ஏன்?


கடந்த பொங்கலுக்கு வர வேண்டிய படம் கடைசி நேரத்தில் பின்வாங்கி கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது அனால் பொங்கல் சமயத்தில் இந்த திரைப்படம் ஒத்தி வைக்கப் பட்ட போது  ஐ திரைப் படத்தின் காரணமாக இத் திரைப் படம் ஒதுங்கியதாக அனைவராலும் சொல்லப் பட்டது. 

ஒரு திரைப் படத்தின் வெளியீடு என்பது அந்தத் தயாரிப்பாளரின் முழு சுதந்திரம் அனாலும் பொங்கல் வெளியீடு என்று விளபரங்கள் செய்யப் பட்டு பின்னர் ஏன் பின்வாங்கியது என்ற கேள்விக்கான பதில் படத்தை கண்ட பிறகு ஓரளவு அனுமானிக்க முடிகிறது.

எனது முந்திய  என்னை அறிந்தால் விமர்சனப் பதிவிலே சொன்னது போல எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது ஆனால் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் , என்னை அறிந்தால் போன்ற கதை அம்சம் உள்ள திரைப் படம் வெளியாகி இருந்தால் அதனைக் கொண்டாடும் மனநிலை அனைவருக்கும் இருந்திருக்குமா என்பது சந்தேகமே .பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கியது ஒரு நல்ல முடிவாகவே நான் கருதிகிறேன்.


 என்னை அறிந்தால் சொதப்பல்கள்

இத்திரைபடத்தின் குறைகளாக சக பதிவர்களும் மற்ற விமசகர்களும் முன்வைப்பது ,

  • படம் பழைய கௌதம் படங்களின் சாயலாக இருக்கிறது 
  • முதல் பாதி மெதுவாக உள்ளது 
  •  அதிரடி த்ரில்லர் படமாக இல்லாது emotional த்ரில்லர் படமாக உள்ளது 
  • வசங்களில் நெறைய கெட்ட வார்த்தைகளை கொண்டிருக்கிறது 

  என்னை அறிந்தால் சூப்பர் அம்சங்கள்  

  •  வேகமான இரண்டாம் பாதி
  •  அஜித் மற்றும் அருண்விஜய் நடிப்பு 
  • பாடல்கள் மற்றும் பின்னணி இசை 
  • தரமான ஒளிப்பதிவு 
  • உனக்கென்ன யாரு சொல்லு பாடல் - இந்தப் பாடலில் ஒரு தந்தைக்கும் மகளிற்குமான அன்பை திரை விருதாக (visual treat ) தந்துள்ளார் கௌதம் அவர்கள் . இந்தப் பாடலில் 4 ஆண்டுகளில் நடைபெறும் விசயங்கள் montage வடிவில் சொல்லப் படுகிறது , ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தினத்தின் (fathers day ) போது வாழ்த்துக்களை ஓவியம் மூலம் தன் தந்தைக்கு வெளிப் படுத்தும் மகள் , பாடலின் முடிவில் தனது தந்தைக்கு அன்னையர் தின வாழ்த்துகளையும் ஓவியம் மூலம்வெளிப் படுத்தும் போது மனதை கவர்கிறது.
  • கதாநாயகியின் பாத்திரப் படைப்பு - .பொதுவாக பெரிய ஹீரோ படங்களில் வருகின்ற கதாநாயகிகள் பெரும்பாலும் பாடல்களுக்கும் காதலிப்பதற்கு மட்டுமே என்றுள்ள இன்றைய நிலையில் , கௌதம் அவர்களின் பெரும்பாலான படங்களில் கதாநாயகியின் பாத்திரப் படைப்பு சிறப்பாகவே இருந்துள்ளது இந்தப் படமும் 3 பெண்களை மையப் படுத்தியே திரைக் கதை செல்வதாக சொல்லப் பட்டிருகிறது 
  • சக்தி இல்லையேல் சிவம் இல்லை - கௌதம் அவர்களின் படங்களிலே  கதாநாயகிகள் அறிவு நிறைந்தவர்களாகவும் , சுயமாக முடிவு எடுப்பவர்கலாகவும் பெரும்பாலும் கட்டப் பட்டிருகிறார்கள் இந்தப் படத்திலும் அவ்வாறே 
  • குடும்ப பாசம் - இந்தப் படத்தில் தந்தை-மகன் மற்றும் தந்தை-மகள் பசக் காட்சிகள் அனைத்தும் கவிதைகள் .
மேற்சொன்ன கருத்துக்கள் அனைத்தும் எனது கருத்துகளே நீங்கள் உங்களுடைய கருத்துகளை பின்னுட்டத்தில் கண்டிப்பாகக் கூறவும் .






2 கருத்துகள்: