இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

டெல்லி அரசியல் புயல் தமிழகத்தில் சாத்தியமா ?

டெல்லி அரசியல் புயல் 

ஒரு புறம் காங்கிரஸ் என்ற ஒரு பெரிய கட்சியினை டெல்லியில் இருந்து முற்றிலும் விரட்டியடித்து,மற்றொரு புறம்  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் துவங்கி இது வரை பெரும் வெற்றிநடை போட்டுவந்த ப ஜே பி கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணியடித்து புயலாக விறுகொண்டு ஆட்சியைப் பிடித்திருகிறது AAP . 

எப்படி சாத்தியமானது இந்த வெற்றி என்பதே தற்போது இந்தியா மற்றுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய நாட்டினரின் பெரியதொரு ஆச்சர்ய கேள்வியாக உள்ளது . 

  • வளர்சிக் காண மனிதர் என்று விளம்பரங்களின் மூலம் தன்னை முன்னிலைப் படுத்தி மத்தியில் ஆட்சியப் பிடித்து கடந்த பல மாதங்களாக காங்கிரசின் திடங்கலேய மீண்டும் தொடர்ந்து வரும் U Turn ஆட்சியை நடத்திவரும் மோடி அவர்களின் மைய அரசின் செயல் பாடுகள் ஒரு முக்கிய காரணமாகப் படுகிறது.
  •  சர்வாதிகாரப் போக்கிலே தனது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பமின்றி, கட்சித் தலைவர்கள் எடுக்கும் அதிரடி கடைசி நேர முதல்வர் வேட்பாளர் மாற்றம் , அதுவும் தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னர் இப்படி ஒரு அறிவிப்பு கண்டிப்பாக தேர்தல் வேலை செய்யுமதொண்டர்கள் மத்தியில் சுணக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
  • கடந்த முறை  49 நாட்களிலே தனது ஆட்சியை ராஜினாமா செய்வதற்கு முன்  AAP வெளியிட்ட பல நல்ல திட்டங்கள்  டெல்லி மக்களிடத்திலே ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது , 
  • மேலும் காங்கிரஸ் போன்ற மூழ்கும் கப்பலுக்கு வாக்களிக்க விருப்ப மற்ற ப ஜே பி கட்சியினை விரும்பாத வாக்குகளையும் பெற்று பெரியதொரு வெற்றியினை அடைந்திருகிறது AAP கட்சி .

புதியதொரு அரசியல் பாதை 

இந்திய அரசியலில் ஆட்சிக் கட்டிலில் அமர  பெரியதொரு கட்சிகளின் ஆள் பலமும் , பண பலமும் , கண்டிப்பாக தேவை என்கிற மரபை உடைத்து மத்திய தர மக்கள் சேர்ந்து அடித்தட்டு மக்களிடம் கைகோர்த்து அயராது உழைத்தால் கண்டிப்பாக ஆட்சிக் கட்டிலில் அமரலாம் என்ற புதியதொரு பாதையைக் காட்டியிருகிறது  AAP கட்சியினுடைய இந்த மாபெரும் வெற்றி ! 

AAP கட்சி தங்களது தேர்தல் அறிவிப்புகளை டெல்லியிலே நடைமுறைப் படுத்திக் காட்டும் பட்சத்திலே இந்த புதியதொரு அரசியல் பாதை இந்தியா முழுவதும் பிரதி பலிக்கக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 


தமிழகத்திலே இது சாத்தியமா?


டெல்லியில்லிருந்து நமது பார்வையை தற்போது இடை தேர்தல் நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ ரங்கம் நோக்கித் திருப்பினால் டெல்லி யைப் போன்றதொரு புதியதொரு மாற்றம் தற்போதைக்கு இங்கு சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.



இடைத் தேர்தல் திருவிழா !


கடந்த மாதம் வரை காத்திருந்தும் நேரில் காண முடியாத - அமைச்சர் பெருமக்கள் எங்கள் வீதிகளிலே  !
இலவச பிரியாணி கடைகளாக  மாறி போன திருமண மண்டபங்கள் !
வெளியூர் கரைவேட்டி காரர்களால் நிரம்பி வழியும் லாட்ஜுகள் !
இருட்டியதும் அங்கங்கே தற்காலிக  இலவச மதுக்  கடைகள் !
இரவில் கதவைத் தட்டி தரபப்படுகிற தாராளமயம் !
விட்டில் புச்சியாய் கட்சிகளின் பணத்திற்கு மயங்கும் மக்கள் !
எங்கள் தொகுதிக்கு எப்போது வருமிந்த திருவிழாவென - ஏங்கும் 
ஏனைய தொகுதி மக்கள் !
ஆம் எங்களூரில் நடப்பது தேர்தல் அல்ல திருவிழா !







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக