இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஜனவரி, 2015

ஆங்கில அறிவை வளர்க்க உதவும் மொபைல் ஆப்கள்



இன்றைய மொபைல் போன் உலகில் நாம் பல்வேறு வகையான கேம்ஸ்களை நமது ANDRIOD  போன்களில்  உபயோகபதுதுகிறோம்  ஆனால் அவை பெரும்பாலும் நமது பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன் படுகிறது. கீழே காணப்போகும் ANDRIOD கேம்ஸ் நமது ஆங்கில அறிவை வளர்க்கப் பயன்படும்.

நமது குழந்தைகளும் சரி நமது நண்பர் உறவினர்களின் குழந்தைகளும் இப்போது நம்மிடம் தயக்கமின்றி நமது மொபைல் போன்களை கேட்டுப் பெற்று கேம்ஸ் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் , அச்சமயங்களில் பின்வரும் விளையாட்டுக்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களின் ஆங்கில அறிவை வளர்க்க உதவலாம் .

1. Words of Wonder :



 இந்த கேம் ANDRIOD  ஆப்பிள் மற்றும் விண்டோஸ் ஸ்மார்ட் போன்களுக்கு தரமிறக்கி இன்ஸ்டால் செய்து உங்களது ஆங்கில வோகாபுலரியை (vocabulary) வளர்த்துக் கொள்ளுங்கள் . இந்த விளையாட்டு மேலிருந்து கீழாகவும் , பக்கவாட்டிலும் 3 வார்த்தைகளுக்கு மேலான ஆங்கில வார்த்தைகளை கண்டறியும் விளையாட்டாகும்.
இந்த ஆப்பை  உங்களது ANDROID ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கம் செய்ய,

words of wonder



2. Learn English 6000 Words

உங்களது ஆங்கில வோகாபுலரியை (vocabulary) வளர்த்துக் கொள்ள உதவும் மற்றுமொரு ANDRIOD ஆப் இது . ஆங்கிலத்தில் பல்லாயிர கணக்கான வார்த்தைகள் இருந்தும் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கும் வார்த்தைகள் சில ஆயிரங்களே. இந்த ஆப்பில் இருக்கும் 6000 ஆங்கில வார்த்தைகள் நமது ஆங்கில மொழியறிவை உயர்த்த பெரிதும் பயன் படும்.

இந்த ஆப்பை  உங்களது ANDROID ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கம் செய்ய,

learn english 6000


3. WORD HERO 


இந்த ஆப்பை நீங்கள் மட்டுமலாது உங்களது நண்பர்களையும் அவர்களின் போனில் இன்ஸ்டால் செய்து ஒரு குழுவாக நீங்கள் இந்த கேமை விளையாடி அனைவரும் ஆங்கில அறிவினை வளர்த்திடலாம்,

இந்த ஆப்பை  உங்களது ANDROID ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கம் செய்ய,

word hero


4. BLIZZ வோர்ட்ஸ் 

இது ஒரு பிரபலமான வோர்ட் puzzle விளையாட்டாகும். இந்த விளையாட்டில் நீங்கள் கண்டறிந்த வார்தைகளைகொண்டு ஒரு நூலகமே அமைத்துகொள்ளும் வசதி உள்ளது தனிச் சிறப்பு .

இந்த ஆப்பை  உங்களது ANDROID ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கம் செய்ய,

Blizz Words


மேலும் சில ஆங்கில அறிவை உயர்த்தப் பயன்படும் ஆப்களை அடுத்த பகுதியில் காணலாம்.




வெள்ளி, 23 ஜனவரி, 2015

சென்னையில் ஆட்டோ அடாவடி ! தடுக்க வழி !




சென்னை ஆட்டோ டிரைவர்களின் அடாவடி அனைவரும் அறிந்ததே ! சென்ற ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டாயம் ஆக்கப்பட்டதும் , ஆட்டோ டிரைவர்கள் கண்டிப்பாக மீட்டர் போட்டுதான் ஓட்டுவார்கள் என்று நம்பி ஏமாந்தோம் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறோம்

ஆட்டோ மீட்டர் கட்டாயமாக்கப்பட்ட போது ஆட்டோ டிரைவர்கள் பெட்ரோல் விலையை காரணம் காட்டி அரசு வெளியிட்ட கட்டண பட்டியல் தங்களுக்கு கட்டுபடியாகாது என்று வாதிட்டனர்.

சென்ற ஆண்டை ஒப்பிடும் போது தற்பொழுது பெட்ரோல் விலை கணிசமாக குறைந்திருகிறது ஆனால் இப்போது கூட மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்ட மறுக்கிறார்கள். மேலும் நாம் மீட்டர் போடும் ஆடோவில்தான் பயணிப்பேன் என்றெண்ணினால் நாம் குறைந்தபட்சம் 10 ஆட்டோகளையாவது விசாரிக்க வேண்டியிருக்கும்! இன்னும் சில இடங்களில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் ஒன்று சேர்ந்து மீட்டர் ஆட்டோ கிடைக்காது என்கின்றனர்.

உதாரணத்திற்கு கிண்டியின் உட்பகுதியிலிருந்து திநகர் செல்ல வேண்டுமெனில் ஆட்டோ மீட்டர் கட்டணம் 100 ரூபாய்தான் வரும் அனால் ஆட்டோ ஓட்டுனர்கள் கிண்டியின் உட்பகுதியிலிருந்து கிண்டி இரயில் நிலையத்திற்கே 100 ரூபாய் கட்டணமாக கொள்ளையடிக்கின்றனர் .

காவலர் ஒருவரிடம் ஒருமுறை இதைபற்றி முறையிட்டபோது அவர் என்னிடம் "ஒனக்கு கட்டணம் கட்டுபடியாகலனா பேருந்தில் செல்" என்று முடித்துக்கொண்டார் .

ஆட்டோ கட்டணம் கால்டாக்ஸி கட்டணத்தைவிட அதிகம் 

எனவே முடிந்தவரை நான் கால் டாக்ஸியில் பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். தற்பொழுது OLA  போன்ற smart போன் ஆப்கள் வந்து கால் டாக்ஸி புக் பண்ணுவதை சுலபமாக்கி இருக்கின்றன .

தற்பொழுது OLA  ஆட்டோ சேவையை தொடங்கியிருக்கின்றனர். நான் சென்ற வார இறுதியில் நான் OLA  ஆட்டோ சேவையை பயன் படுத்தினேன் 5 நிமிடங்களில் வீட்டிலிருந்தே ஆட்டோ சேவையை பெற முடிந்தது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. ஆட்டோ ஓட்டுனரின் கைபேசி என்னும் SMS செய்யபடுகிறது . அவருடன் பேசி நமது வீட்டு முகவரி மற்றும் வழியை சொன்னதும் அடுத்த 5 நிமிடங்களில் மீட்டர் கட்டணத்தில் பயணித்தேன் . OLA நிறுவனத்திற்கு மீட்டர் கட்டணத்தை விட 10 ரூபாய் அதிகமாக தந்தால் போதும்.

OLA   ஆட்டோ சேவைகளை நாமும் பயன்படுத்தி நமது நண்பர்களுக்கும் தெரிவித்து பெரும்பாலானோர் பயன்படுத்தும் போது மற்ற ஆட்டோ ஓட்டுனர்களும் மீட்டர் கட்டணம் மட்டுமே வாங்கும் நிலை கண்டிப்பாக சென்னையில் வரும்.


OLA CABS  100 ரூபாய் இலவசம்

நீங்கள் OLA  மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்யும் போது KQR90Y என்ற ரெபரல் கோடை பயன்படுத்தினால்  100 ரூபாய் உங்களது கணக்கில் OLX  மணியாக சேர்க்கப்படும்  

நீங்களும் இந்த சேவையை பெற கீழ்க்கண்ட லிங்குகளை அழுத்தவும்

விண்டோஸ் போன் \ டாபிலிருந்து பதிவிறக்கம் செய்ய கீழே செல்லவும்

OLA CABS windows phone app

android போனுக்கு \ \ டாபிலிருந்து பதிவிறக்கம் செய்ய கீழே செல்லவும்
android phone OLA app

I phone OLA  app


நீங்கள் OLA  மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்யும் போது KQR90Y என்ற ரெபரல் கோடை பயன்படுத்தினால் 100 ரூபாய் உங்களது கணக்கில் OLA மணியாக சேர்க்கப்படும் 

ஐ திரைப்படம் பெண்களை இழிவு படுத்துகிறதா ?

ஐ திரைபடத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரிதுள்ளதாக சங்கருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடந்து வருகிறது அனைவரும் அறிந்ததே. சங்கர் போன்ற ஒரு பெரிய அனுபவம் வாய்ந்த இயக்குனரிடம் இதை யாரும் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை அதனால் தான் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாய்ஸ் திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் ஒற்றை வரியில் எழுதிய சீ ! என்ற விமர்சனத்தை யாரும் மறந்து விட முடியாது . சங்கரும் பாய்ஸ் திரைப்படம் தவிர மற்ற படங்களில்  சமூக அக்கறையுள்ள கதாநாயக பாத்திரம் கொண்ட திரைபடங்களை பெரும்பாலும் கொடுத்து வந்திருக்கிறார் .

ஆனால் ஐ திரைப்படம் திருநங்கைகளை வெளிபடையாக கேலி செய்வது போன்ற காட்சிகளை வைத்தது மற்றுமன்றி பெண்களையும் மறை முகமாக காட்சிப் பொருளாக கட்டுகின்றார்.


ஏற்கெனவே தமிழ் படங்களில் பெண்களை கவர்ச்சி பதுமைகளாக காண்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் அனால் சங்கர்  ஒரு படி மேலே சென்று "மெருசலாயிட்டேன்" பாடலில் கதாநாயகியை கை பேசி (mobile) ஆகவும் இரு சக்கர வாகனமாகவும் (மோட்டார் பைக்) தொலைகாட்சி பெட்டியாகவும் உருமாற செய்து , ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களிலே ஒன்றாக பெண்களை காட்சி  படுத்தி  இருக்கிறார்  சங்கர்.

பெரியார்  வாழ்ந்த  இந்த சமூகமும் இதனை சகித்துக் கொண்டிருக்கிறது !
ஐ திரைப்படத்தை தொழில்நுட்பத்தில் சிறந்த படைப்பாக கொடுத்திருக்கிற சங்கர். மனிதாபிமானம் சிறிதுமற்ற படைப்பாக கொடுதிருகிரார்.
நமது நாட்டில் நஞ்சைக் கூட அதன் தன்மை தெரியாத வாறு தேன் தடவி தந்தால் , நஞ்சென்று அறியாது வாங்கிப்பருகி களித்திருப்போம் நாம்.

  மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை  திருத்துவோம் வாரீர் !

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஐ, ஆம்பல, டார்லிங் - பொங்கல் ரேஸ்ல முதலிடம் யாருக்கு?

இந்த ஒப்பீடு முழுக்க முழுக்க எனது கண்ணோட்டம் மட்டுமே.

பொங்கல் படங்கள் எவ்வளவு  வசூல் பண்ணியதுனு சொல்ல நான் ஒன்னும் சினிமா வியாபாரி  இல்ல அதனால ஒரு சராசரி சினிமா ரசிகரான என்னை கவர்ந்த படம் எது அப்படின்னு பாக்கலாம் .

ஐ 

எனது ஐ பட விமர்சனத்தை படிக்க
http://paraashakthi.blogspot.in/2015/01/blog-post.html

ஐ படம் விக்ரமோட நடிப்பின் உச்சம் என சொல்லலாம் அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் . , ஒளிபதிவு மிக சிறப்பாக வுள்ளது இப்படி தொழில்நுட்பத்தில் சிறப்பாக  எடுத்து விட்டு  படத்தின்  திரை கதையில் சொதப்பி விட்டார்கள்.

ஆம்பள 

வழக்கமான சுந்தர் c காமெடி படம்.., சந்தானம் காமடிய தவிர பெருசா சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. மொத்தத்தில் சுமாரான ஒரு காமடி படம் படம் அவ்வளவுதான்.

டார்லிங் 
எனது டார்லிங் பட விமர்சனத்தை படிக்க
http://paraashakthi.blogspot.in/2015/01/blog-post_18.html

2015 பொங்கல் ரிலீஸ் படங்களில் கருப்பு குதிரை இந்த டார்லிங். பேய் படத்துல பேய்தனமா காமடி பண்ணி பெரிய நடிகர்களின் படத்தோட வெளியிட்டு ஜெயித்திருக்கிறார்கள்.
படத்துல குறைகள் பல இருந்தும் காமெடிய வைத்து அதையெல்லாம் சரிகட்டிவிடுகிறார்கள்.
அறிமுக ஹீரோ மற்றும் ஹீரோயின் பெரிய காமடி நடிகர்களும் இல்ல படத்துல அனாலும் காமடி கை கொடுத்ததால சொல்லி அடிச்சிருக்காங்க .


நன்றி trollywood

பெரிய நடிகர்களை நம்பாமல் படத்தின் கன்டென்ட் மட்டும் நல்லா இருந்தா படம் நல்லா ஒடுங்கிரத மீண்டும் ஒரு முறை நிரூபித்து பொங்கல் ரேசில் முதலிடம் பிடிகிறது இந்த டார்லிங்!

உங்கள் பார்வையில் பொங்கல் பட வரிசை பற்றி பின்னூட்டத்தில் கூறவும்

டார்லிங் - என்னமா இப்படி பண்றீங்களே மா !



காமடி பேய் படங்கள் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் ட்ரெண்டு அந்த வரிசையில் மற்றுமொரு படம் தான் டார்லிங்.

இந்த படத்தை பார்க்கவேண்டுமென்ற ஆவலை உண்டாக்கியது இந்த படத்தின் டிவி விளம்பரங்கள் தான் .

கதை சுருக்கம்

 இந்த படமும் ஒரு பழிவாங்கல் பேய் பட கதைதான் ஆனால் அதை காமடி கலந்து தந்துருகாங்க. காதல் தோல்வியில் ஹீரோ தற்கொலை பண்ண போக அதை அவரோட ஒரு தலை காதலி ஹீரோவோட நண்பரின் உதவியால் தடுத்து நிறுத்தி, ஹீரோவோட மனச மாத்துறதுக்காக அவர ஏமாத்தி ஒரு பேய் பங்களாக்கு கூட்டிட்டு போறாங்க. அங்க அவங்களுக்குள்ள லவ் வர .ஆனா அந்த பங்களால இருக்குற பேய் கதாநாயகி ஒடம்புல புகுந்து ஹீரோவா நெருங்க விடாம அதகளம் பண்ண. கடைசில ஹீரோ எப்படி பேயை தனது காதலிய விட்டு துரத்துராறு அப்படிங்கறது தான் டார்லிங் பட கதை சுருக்கம்.

காமடி படத்துல காமடியதான் எதிர்பார்க்கனும் அதைவிட்டு லாஜிக் எதிர் பார்க்குற ஆளுகளுக்கு இந்த படம் பிடிக்காது

படத்தின் சுவாரசியங்கள்

கனாகாணும் காலங்கள் பாலா 

மனுஷன் கலக்கி இருக்காப்புல இடைவேளை வரைக்கும் படத்த தனியாளா தனது தொழில் சுமந்து போறாரு. நல்ல டைமிங் காமடி பண்றாப்புல அடுத்தது நல்ல படம் அமைஞ்சா பெரிய ரவுண்டு வருவாரு . பேய் பங்களா போனதும் தனது நண்பனையும் அவரோட காதலியையும் சேர்த்து வைக்க இவர் செய்யும் மாமா வேலை எல்லாமே சிரிப்பு சரவெடிகள் .

கருணாஸ் 


நம்ப கருணாசுக்கு இது ஒரு reentry படம்.பாலாவோட சேர்ந்து சூப்பரா காமடி பண்ணியிருக்காரு .

நான் கடவுள் ராஜேந்திரன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் சிரிக்க வைத்தே கொல்றாரு

படத்தின் பலவீனங்கள் 

 ஆரம்பத்துல படம் ஸெல்ப் எடுக்க கொஞ்சம் லேட்டாகுது பெரிய குறை அப்புறம் நம்ம ஹீரோ சாருக்கு முதல் படங்கறதால நடிப்பு வஸ்து கை கொடுக்கல.

படத்துல இன்னும் பல குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் நல்ல காமடி காட்சிகள் கவர் செஞ்சிடுது.


மொத்ததுல பேய் ஒவ்வருமுறை வரும்போதும் பயத்திற்கு பதிலா நல்லா சிரிப்பு வர்ற மாதிரி காட்சிகளை வைத்து நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறாள் இந்த டார்லிங் !


   


வெள்ளி, 16 ஜனவரி, 2015

ஐ - அதுக்குமேல கிருமி விமர்சனம்


கதை சுருக்கம் 
  வாழ்க்கையில் விரைவில் உச்ச நிலையடையும் ஒருவனை அவன் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் கூடி  வேரோடு வீழ்த்த அவன் எதிரிகளை எப்படி சங்கர் பாணியில் பழிவாங்குகிறான் என்பதே ஐ படத்தின் கதை சுருக்கம்.

படத்தின் சிறப்புகள் 

விக்ரம் - நடிப்பு ராட்சசன் விக்ரம் வழக்கம்போல் சிறப்பாக கலக்கி இருக்கிறார் 
ஒளிப்பதிவு - கலக்கலான கலர்புல் ஒளிப்பதிவு 
பாடல்கள், பின்னணி இசை - பாடல்கள் படமாக்கபட்ட விதமும் பின்னணி இசையும் அருமை 

எமி ஜாக்க்ஷன் - தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் அனைவரையும் உறைய வைக்கிறார் 

சந்தானம் - நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மை சிரிக்கவைத்த்து படத்தை காப்பாற்றுகிறார் 


படத்தின் குறைகள்
படத்தின் நீளம் ரொம்ப குறை விரைவில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி குறைக்கப்படலாம் 
திரைக்கதை - எந்த திருப்பமும் இல்லாமல் ஆங்காங்கே கொட்டாவி வர வைக்கும் திரைக்கதை 

உயிரை கொடுத்து நடித்திருக்கும் விக்ரமிற்காக நல்லதொரு திரை கதையை யோசிக்காமல் தனது பிருமாண்டம் மட்டுமே போதும்னு நெனச்சிட்டாரு போல சங்கர் ஸார். 

சங்கர் ஸார் ரசிகரா படத்துக்கு போயிட்டு விக்ரம் ரசிகரா திரும்பி வந்துருக்கேன் 

சங்கர் ஸார் ஒங்ககிட்ட இதுக்கு மேல எதிர்பாக்குறோம்!