இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரை வெட்டி) அரிய பயண அனுபவம் - பகுதி 2

முந்தைய பதிவில் மணிமுத்தாறு அருவி வரை வந்தாச்சு அடுத்து மஞ்சோலை பயணம்,முன்னர் சொன்னபடி மணிமுத்தாறு அருவியிலிருந்த வனத்துறை அதிகாரிகளிடம் குதிரை வெட்டி செல்வதற்கான அனுமதியை காண்பித்ததும் மேலே செல்ல வழி விட்டனர்.

இப்போது மழை பெரிதாக பெய்ய ஆரம்பித்தது, மழை நிற்கும் வரை காத்திருந்து பயணத்தை தொடர்ந்தோம். சாலையின் இருபுறமும் உயர்த்த மரங்களை காண முடிந்தது, எங்கள் வாகனம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தது.அருவியிலிருந்து 4KM தொலைவில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் வந்தது, அங்கிருந்து 20KM தொலைவில் மாஞ்சோலை எஸ்டேட் சோதனை சாவடியை அடைந்தோம்.

tiger reserveசோதனை சாவடியில் நுழைவுக்கட்டணம் RS40 செலுத்திவிட்டு பயணம் தொடர்ந்தது, மலைப்பாதையில் செல்லும்போது சாலையோரத்தில் கரடியொன்றை பார்த்தோம். மஞ்சோலை எஸ்டேட் ஆரம்பத்தில் ஒரு அம்மன் கோவில் இருந்தது. மாஞ்சோலையில் எங்கு பார்த்தாலும் இயற்கை தாய் பச்சையாடையுடித்தி எங்கள் கண்களுக்கு விருந்து படைத்தால், மதிய நேரமும் வந்ததால் மான்ஜோலயிலுள்ள ஒரு உணவு விடுதியை கண்டுபித்தோம் ஆனால் அங்கு உணவு இல்லை, முன்பே தகவல் தந்தால் மட்டுமே உணவு கிடைக்குமாம்.அங்கிருந்த பேகரியில் கிடைத்த  பண்ணும் ஜாமும் வாங்கி எங்கள் பசியை தீர்த்தோம்.

manjolai tea estate1 மாஞ்சோலை எஸ்டேட்

மாஞ்சோலையில் எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களாக உள்ளது, தோட்ட தொழிலாளர்களின் தொகுப்பு வீடுகளை காண முடிந்தது, மேலும் ஒரு காவல் நிலையம், ரேசன் கடை போன்ற வசதிகளும்  தேயிலை தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்  இருக்கிறது. மாஞ்சோலையில் அடுத்து எங்கள் மனதை கவர்ந்த இடம் பட்சைபுல்வெளி நிறைந்த பின்வரும் படத்திலிருக்கும் இடம் ,

manjolai-greenary   

manjolai-greenary1

மான்ஜோலையை ரசித்த பிறகு அடுத்த எங்களது இலக்கான நாலுமுக்கு எனும் இடைத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். அடர்ந்த காடுகளும் தேயிலை தோட்டங்களும் மாறி மாறி சாலையின் இருபுறமும் வந்து கண்களுக்கு விருந்து படைத்து.நாலுமுக்கின் ஆரம்பத்தில் தேயிலை தூள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்று எங்களை அன்புடன் வரவேற்றது. நாலுமுக்கில் அன்று இரவு உணவிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வேண்டுமென முன்பே அறிவுறுத்தப் பட்டிருந்ததால் அவற்றை வாங்கிக் கொண்டோம். இந்த இடத்தில் ஒரு மருத்துவமனையும் இருக்கிறது.

manjolai workers hut

குதிரை வெட்டி பயணம் மற்றும் திக் திக் இரவு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக