இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூன், 2009

இலவசமாக வீடியோ சாட்டிங் வசதி

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் வீடியோ கால்கள் என்பது சிறந்ததொரு தொடர்பு கருவியாக விளங்குகிறது, நீங்கள் இதன் வாயிலாக பேசுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை காணவும் முடியும்.

ooVoo மற்றும் skype வாயிலாக நீங்கள் இந்த வசதிகளைப் பெறலாம். ooVoo free version மூலமாக நீங்கள் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை ooVoo கணக்கு வைத்துள்ள உங்கள் நண்பர்களை கட்டணமின்றி தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 தொடர்புகளை ஏற்படுத்தும் வசதி உள்ளது சிறப்பம்சமாகும். உங்களது
வீடியோ சாட்டிங்கை பதிவு செய்யும் வசதியும் உள்ளது, மேலும் 25MB அளவுள்ள கோப்புகளையும் பரிமாறும் வசதி கூடுதல் சிறப்பாகும். இந்த வசதிகள் இலவசமாக
வழங்க படுவதால் விளம்பரதொல்லைகள் அதிகம் இருக்கும்.

oovoo

திங்கள், 8 ஜூன், 2009

வரலாற்று சாதனை படைத்தார் பெடரர்


13 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர் முதன் முறையாக நேற்று
முதன் முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்று தனது பிரெஞ்சு ஓபன் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 14 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்துள்ளார், சாம்ப்ராஸ் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெடரர் இந்த வெற்றியின் மூலம் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 6 வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடாலிடம் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து வந்த பெடரர் இந்தமுறை தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக திகழும் பெடரரின் இந்த வெற்றி அவரின் காத்திருத்தலுக்கு கிடைத்த வெற்றியாகும் , தன்னைபோன்ற சிறந்த வீரர்களுக்கே பிரெஞ்சு ஓபன் சிறந்த சவாலாக அமைந்தது அனாலும் 4 வருட கடின உழைப்பிருக்கு பிறகு இந்த வெற்றியை பெற்ற பெடரருக்கு வாழ்த்துக்கள்!

புதன், 3 ஜூன், 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே


சிங்களத் தீவினிலே சீரழிந்த எம்மக்கள்
சிதைந்து விட்ட அவர்தம் இருப்பிடங்கள்
புதைந்து விட்ட இளந்தளிர்கள்

சேதுவை மேடுருத்த இராமர் பாலம்தனை
இடிக்கையிலே - வெகுண்டெழுந்த பாரதமே
எங்களினமே அங்கு இல்லாதாகிவிடும்
நிலை தனிலே
கண்ணிருந்தும் குருடர்களாய்
செவியிருந்தும் செவிடர்களாய்
வாயிருந்தும் ஊமைகளாய்
வேடிக்கை பார்ப்பதுமேன் ?

எம்மக்கள் சொல்லொணா துயரத்தை
ஓட்டுக்கு அடகு வைத்த - கயவர்களை
காண்கையிலே நெஞ்சு பொறுக்குதில்லையே !

திங்கள், 1 ஜூன், 2009

பரிணாம வளர்ச்சி



மாதத்தின் மத்தியிலே மகத்தான மண விழாவாம்

மணப்பெண்ணாக வேண்டுமெனில் மாருதிகார் வேண்டுமாம்

மாருதி காரோடு அதை நிறுத்த ஒரு மாளிகையும் வேண்டுமாம்

மணமகனோ பெற்றோரின் விருப்பமென்று ஊமையானான்

பெண்ணை பெற்றவனோ தான் பெற்ற செல்வத்தை தாராளமாய்

விற்று முடித்து மணமுடித்தான்.


வருடங்கள் உருண்டன இன்று மணப்பெண்ணே மாமியாராய்

தன் மகனிற்கு மணப்பெண்ணை தேடுகிறார் பரிணாம வளர்ச்சியோடு

மாருதி காரில்லை ஹோண்டா அக்டிவா வேண்டுமாம்

இங்கேயும் மணமகன் பெற்றோரின் கீழ்படிந்தவேனே

இந்தப் பரிணாம வளர்ச்சி இருக்கும்வரை

வரதட்சணை வளருவதிலே வியப்பென்ன?

களிமண் தரை மன்னன் முடியிழந்தார் - பிரெஞ்சு ஓபன்



பிரெஞ்சு ஓபெனில் தான் விளையாடத்துவங்கிய 2005 முதல் சென்ற ஆண்டு வரை
முடி சூடா மன்னனாக விளங்கிய நடால் நேற்று நடை பெற்ற 2009 பிரெஞ்சு ஓபெனில் நான்காவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் பட்டம் வென்று தொடர்ந்து அயிந்தாவது முறையாக வென்று சாதனை புரிவார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி தனது 32 தொடர் வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடால். (நம்ம தேர்தல் முடிவு போலவே ஆயிடுச்சு)

இந்த தோல்வியின் மூலம் ரோஜர் பெடரர் 14 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. பெடரர் இந்த ஆண்டு பட்டம் வென்றால் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 6 வது வீரர் என்ற சாதனை படைப்பார். இச்சாதனை புரிய பெடரரை வாழ்த்துவோம்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடால் " இந்த தோல்வி சோகமானதல்ல, என்றாவது ஒரு நாள் தோல்வியை சந்திக்க நேரிடும், தொடர் வெற்றிகளை பெறும்போது எப்படி அமைதியாக ஏற்றுக்கொண்டேனோ அதைப்போல இந்த தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென" தெரிவித்தார். நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிது.