இந்த வலைப்பதிவில் தேடு

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜூன், 2016

இறைவி



இறைவி 

பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி,
பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும்  தெய்வமென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பது போற் கதைகள் சொல்வீர்!
விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்!
பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை
(பாரதியார்  கவிதை  அறுபத்தாறு, பெண் விடுதலை - 45)

பெண்களுக்கு விடுதலை இல்லையென்றால் இந்த உலக வாழ்க்கைச் சிறக்காது என்பது பாரதியின் அழுத்தமான கருத்தாக வெளிப்படுகிறது!

மேற்கண்ட பாரதி பாடலின்  திரைப்பட வடிவமே இறைவி.
இப்பவர்ற படங்களுல கதாநாயகி காதல் பன்னவும் டூயட் பாடவும் மட்டுமே தல கட்டுறதே பெரும்பாலும் நடக்குது , ஆனா கார்த்திக் சுப்புராஜுக்கு என்ன ஒரு தயிரியம் பெண்களை சுற்றியே மொத்த படத்தையும் எடுத்திருக்காரு!
 சில சுயநல ஆண்களின் ஆணவப் போக்கினால் பாதிகக்காப்டுற பெண்களின் வலியினை முகத்திலறைந்து உணர்த்தும் உண்ணத படைப்பு இந்த இறைவி! 







திங்கள், 4 மே, 2015

உத்தம வில்லன் - உத்தமனா!? வில்லனா!? - விமர்சனம்

நம்ம தமிழகத்தில் திரை நட்சதிரங்களின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பிம்பங்கள் அல்லது  உச்ச திரை நட்சத்திரங்கள் தங்களின் படம் ஓடுவதற்காக தாங்களாகவே  உருவாக்கி கொண்ட பிம்பங்கள் போன்றவற்றை உடைத்து திரை நட்சத்திரங்களும் நம்மை போன்றே  காதல், பாசம், காமம், வன்மம், துரோகம் போன்ற எல்லாமும் அவர்களுக்கும்  இருக்கிறதென்று நகைச்சுவையுடனும் மனதைப் பிழியும் காட்சிகளுடனும் வெளிவந்திருகிறது கமலின் இந்த உத்தம வில்லன்!




கதை சுறுக்கம்:

 உச்ச திரை நட்சத்திரமாக மின்னிகொண்டிருக்கும் ஒரு பெரிய கதாநாயகன் தனது ஆயுள் இன்னும் சில நாட்களே எனத் தெரிந்து கொள்ளும் போது தன்னை அறிமுகப் படுத்தி தனது உயர்வுக்கு ஏணியாக இருந்த இயக்குனரிடம் இணைந்து ஒரு நல்ல தனது மனதிற்கு பிடித்த திரைப் படத்தை தந்து விட்டு இறக்க ஆசைப் படுகிறார். அவரின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே உத்தம வில்லனின் கதை.

படத்தில் என்னைக் கவர்ந்தவை:

  • ரொம்ப சோகமான கதை கொண்ட  திரைபடத்தில் கதைக்குள் கதை சொல்லும் திரைக் கதை உத்தி மூலம் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த திரைப்படமாக தந்த விதம்.
  • கமல், நாசர் , ஊர்வசி, ஆன்ட்ரியா, பார்வதி, M S பாஸ்கர் போன்றோரின் அருமையான நடிப்பு. கார் டிரைவர் உட்பட படத்தின் பெரும்பாண்மையான கதா பாத்திரங்கள் ரொம்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.
  • மனதிப் பிழியும் காட்சிகள் :
                 1. தனது தாயை காதலித்து  ஏமாற்றிய கமலை கோபத்தோடு காண வந்த பார்வதி கமல் தனது தாய்க்கு எழுதிய பழைய கடிதத்தை படிக்க படிக்க , கமல் தனது முகத்திலுள்ள பல வண்ண மேக்கப்பை துடைத்து தான் செய்த பாவத்தில் கொஞ்சத்தை துடைததைப் போல பார்க்கும் காட்சி அருமை

              2. கமலிற்கும் அவரது மேனேஜர்  M S பாஸ்கர் இடையே வரும் கடிதக் காட்சியும் மனதை தொடும் ரகம்.

              3. கமலிற்கும் அவரது மகனிற்கும் இடையில் நடக்கும் உரையாடல் மனதைப் பிழியும் ரகம்.


படத்தின் குறைகள்:

  •     அங்காங்கே மெதுவாக செல்லும் திரைக்கதை 
தமிழில் ஒரு  உலகத் திரைப் படம் :

உத்தம வில்லன் போன்ற கதையினை யோசிக்கவும், எழுதவும், நடிக்கவும் முடிந்த ஒரே நடிகர் கமல் மட்டுமே! சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போடும் இளம் நடிகர்கள் ஏன் கமல் இடத்திற்கு ஆசைப் படவே முடியாது என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக இந்தப் படம் அமைந்துள்ளது

மொத்தத்தில் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான மனதை தொட்ட ஒரு திரைப் படம்.

அன்பேசிவம் போன்ற திரைப் படம் வெளியான வேளையிலே அதை வெற்றியடைய செய்யாமல் தற்போது அந்தப் படத்தை டீவியில் கண்டு மனதராப் பாராட்டும் இனிய தமிழ் திரை ரசிகப் பெருமக்களே உத்தம வில்லன் படத்தை வெண் திரையில் கண்டு வெற்றிபெற செய்து இதனைப் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைபடங்கள் வெளிவர செய்யுங்கள் !



                                    





ஞாயிறு, 1 மார்ச், 2015

காக்கி சட்டை - சிரிப்பு(பூ) போலீஸ்

வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் சிவ கார்த்திகேயன் நடிக்க வந்து சில வருடங்களில் இவ்வளவு பெரிய ஒபெனிங் இருக்கிற நடிகரா வளர்த்திருகிறது ரொம்ப பெரிய விஷயம் . இதுவரை அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் காமடிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப் படங்கள் அந்த வரிசையில் இந்தப் படமும் சேருமான்னு பாக்கலாம் வாங்க! 



கதைச்சுருக்கம் 

ஒரு சாதாரண கீழ் நிலை போலீஸ்  ஒரு சர்வதேச மனித உடல் உறுப்புகள் கடத்தல் கும்பலை எப்படி தனது சாதுரியத்தால சட்டம் முன் நிருதுராருகிறத கமெடி கலந்து நம்ம காதுல பூ சுத்தி சொல்லியிருக்காங்க .

படத்தோட சிறப்புகள் 

  • முன் பாதியில் வரும் காமெடி காட்சிகள் 
  • கட்டிகிட பாடல் 
இதுக்கு மேல எனக்கு ஒன்னும் பெருசா சிறப்பா தெரியல 

படத்தோட சொதப்பல்கள் 

  • கட்டிகிட்ட பாடல் தவிர அனைத்து பாடல்களும் சொதப்பல் 
  • ஊகிக்கக் கூடிய சொதப்பலான இரண்டாம் பாதி 
  • நிறைய லாஜிக் சொதப்பல்கள் 
வருத்தப் படாத வாலிபர் சங்கம் போன்ற முழுநீள காமடிப் படங்களில் நம்மை கவர்ந்த  சிவ கார்த்திகேயன் ஒரு முழுநீள காமடிப் படமாக கொடுக்க முடியாதபடி சீரியசான கதை கலனைத் தேர்தெடுத்து அதை  முதல் பாதி காமடி காட்சிகளுடனும் மறு பாதி அலுப்பாகாவும் தந்திருக்கிறார் .

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

காக்கிசட்டை எப்படி இருக்கு - ட்விட்டர் விமர்சங்கள்






தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் கதாநாயகன் சிவ கார்த்திகேயன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகிருக்கும் காக்கிசட்டை திரைபடத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் என்ன சொல்லுதுனு பார்க்கலாம் வாங்க !

1.@cinecafenow காக்கிசட்டை திரைப்படம் சிறந்த பொழுது போக்குத் திரைப்படம் என்று சொல்லி 3.75/5 மதிப்பெண்கள் வழங்கி படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது





2.OnlyKollywood படத்திற்கு 2.75/5 மதிப்பெண்கள் வழங்கி படம் ஆங்காங்கே நல்லா இருப்பதாக கூறுகிறது 



3. IndiaGlitz படத்திற்கு 3 ஸ்டார் வழங்கி வெற்றி பெறுமென்று கணித்துள்ளது