இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 5 ஜூன், 2016

இறைவி



இறைவி 

பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி,
பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும்  தெய்வமென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பது போற் கதைகள் சொல்வீர்!
விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்!
பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை
(பாரதியார்  கவிதை  அறுபத்தாறு, பெண் விடுதலை - 45)

பெண்களுக்கு விடுதலை இல்லையென்றால் இந்த உலக வாழ்க்கைச் சிறக்காது என்பது பாரதியின் அழுத்தமான கருத்தாக வெளிப்படுகிறது!

மேற்கண்ட பாரதி பாடலின்  திரைப்பட வடிவமே இறைவி.
இப்பவர்ற படங்களுல கதாநாயகி காதல் பன்னவும் டூயட் பாடவும் மட்டுமே தல கட்டுறதே பெரும்பாலும் நடக்குது , ஆனா கார்த்திக் சுப்புராஜுக்கு என்ன ஒரு தயிரியம் பெண்களை சுற்றியே மொத்த படத்தையும் எடுத்திருக்காரு!
 சில சுயநல ஆண்களின் ஆணவப் போக்கினால் பாதிகக்காப்டுற பெண்களின் வலியினை முகத்திலறைந்து உணர்த்தும் உண்ணத படைப்பு இந்த இறைவி!