இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரை வெட்டி) ஒரு அரிய பயண அனுபவம்

குற்றாலம் செல்ல வேண்டுமென்று நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நெருங்கிய நண்பரிடமிருந்து குதிரை வெட்டி.  செங்கல் தேறி  சிறப்பினை தெரிந்துகொண்டோம் ஆனால் வனத்துறை அனுமதி பெற்றால்தான் இவ்விடங்களுக்கு செல்ல முடியும், வனத்துறை அனுமதியையும் அவரே பெற்று தந்ததால் எங்களது வேலை சுலபமானது . சென்னையில் இருந்து மாஞ்சோலை (குதிரை வெட்டி) மற்றும் செங்கல் தேறி ஆகிய இடங்களுக்கு செல்ல நெல்லை விரைவு வண்டியில் கிளம்பினோம்.

நெல்லையில் தவேரா வண்டியுடன் காந்திருந்த நண்பருடன் பயணத்தை துவங்கினோம்,நெல்லையில் இருந்து சுமார் 42KM தூரமுள்ள மணிமுத்தாறு அணையினை அடைந்தோம்.அங்குதான் வனத்துறை சோதனை சாவடிவுள்ளது, அங்கு அனுமதி பெற்று மலை பாதையினை ஏறத்துவங்கினோம்.

manimuthar dam        மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அருவி

மணிமுத்தாறு அணையிலிருந்து மலைப்பாதையில் 7KM பயணத்திற்கு பிறகு மணிமுத்தாறு அருவியினை அடைந்தோம்.மலைப்பாதை குண்டும் குழியுமாக இருந்தது, சாலையோர பலகையொன்று அதிகபட்சம் 30KM வேகம் என எச்சரித்தது ஆனால் இந்த சாலையில் 30KM வேகத்தில் கண்டிப்பாக செல்ல முடியாது. பாதையின் இருபுறமும் காய்ந்து போன மரங்களையே பார்க்க முடிந்தது.

Manimuthar falls மணிமுத்தாறு அருவி

(குற்றாலம் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்த ஒரு நண்பர் இந்த அருவியை பார்த்தும் கொஞ்சம் திருப்தியடைந்தார்).குளிக்க தகுந்த அளவிலே தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் ஒரு மணி நேரம் ஆசை தீர குளித்து முடித்தோம்.குளிதுகொண்டிருக்கும் போதே சாரல் தூர ஆரம்பித்து குளிர் காற்று விசத் தொடங்கியது.இந்த அருவியில் மொத்தம் மூன்று இடங்களில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அருவியின் கீழே ஒரு தடாகம் அழகாக இருந்தது, 80M ஆழமுள்ள தடாகம் என்று எச்சரிக்கை பலகையொன்று இருந்தது.

அருவியில் அனந்த குளியல்

இந்த அருவி வரை வருவதற்கு பணம் செலுத்தி அனுமதி பெறலாம் எனவே கூட்டம் இருந்தது, மேலும் இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வருவதால் நம்பி வரலாம். அருவிக்கு எதிரே இருக்கும் கீழ்வரும் படத்திலுள்ள பாலத்தின் வழியாகத்தான் மாஞ்சோலை செல்ல வேண்டும். இந்த பாலத்தில் வனத்துறை தடுப்பு உள்ளது அவர்களிடம் மஞ்சோலை செல்ல வைத்திருந்த அனுமதி சீட்டை காண்பித்து மேற்கொண்டு பயணத்தை தொடங்கினோம் ...

Manimuthar bridge

மனதைகவரும் மாஞ்சோலை மலை பயணம் அடுத்த பகுதியில் தொடரும்

3 கருத்துகள்:

  1. monkey pathi solala,v r just guest to them na,they r the resident in manimutharu falls

    பதிலளிநீக்கு
  2. மணிமுத்தாறு அருவி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் இவ்வளவு அழகானது என்று இன்றுதான் தெரிகிறது!

    மாஞ்சோலை மலைப்பயணம் எப்போது தொடரப்போகிறீர்கள்? இரண்டுமாதமாகிவிட்டதே..!

    மேலும் தெரிந்து கொள்ளும்ஆர்வமுடன்..

    பதிலளிநீக்கு