இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரைவெட்டி)அரிய பயண அனுபவம் - நிறைவுப் பகுதி

பயணத்திட்டபடி நாலுமுக்கில் இருந்து 20 KM தூரமுள்ள குதிரைவெட்டியை நோக்கி புறபட்டோம், செல்லும் வழியெங்கும் தேயிலை தோட்டங்களும், தோட்ட தொழிலாளர் குடில்களும் நிறைந்திருந்தது, 12KM பயணத்திற்கு பிறகு ஊத்து என்ற இடத்தினை அடைந்தோம். நாலுமுக்கை போலவே ஊத்திலும் ஒரு சில மளிகை கடைகளையும் காய்கறி கடைகளையும் காண முடிந்தது. ஊத்திலிருந்து குதிரைவெட்டி செல்லும் அடர்ந்த காட்டு மலைப்பாதையில் வாகனம் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் சிங்கவால் குரங்குகளை கண்டோம்.

monkey

குதிரைவெட்டியை அடைந்த போது மாலை 5 மணியை நெருங்கியது    மலையுச்சியில் அடர்ந்த காட்டிற்கு அருகிலிருந்த வனத்துறை விடுதியொன்றில் தங்க ஏற்கனவே அனுமதி வாங்கி இருந்ததால், அங்கு சென்று சிறுது நேரம் ஓய்வு எடுத்தோம், குதிரைவெட்டியில் வனத்துறையினரால் கட்டப்பட்ட வாட்ச் டவர் ஒன்றும், வயர்லஸ் டவர் ஒன்றும் இருக்கிறது. வாட்ச் டவரிலிருந்து பார்த்தால் சுற்றி இல்ல மலைகளனைத்தும் தெரிந்தது மேலும் கரையார் , மணிமுத்தாறு ஆகிய அணைகளும் தெரிகிறது. சுற்றியிள்ள மலை பகுதிகளில் எங்கு காட்டு தீ ஏற்பட்டாலும் அதை எளிதில் கண்டறியும் வகையில் இந்த இடத்தில் வனத்துறையால் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

kuthirai vetti mountain குதிரைவெட்டி

திருநெல்வேலியிலிருந்து குதிரை வெட்டிக்கு அரசுப் பேருந்து 3 முறை வந்து செல்கிறது.இரவில் வனத்துறையினர் உதவியுடன் வனவிலங்குளை காண செல்லலாம்.  குதிரைவெட்டியில் நாங்கள் தங்கிய அந்த இரவு வன விலங்குகளின் சத்தங்களுக் கிடையே திக் திக் இரவாகவே சென்றது. கிளைமேட்டும் அருமையாக இருந்தது. மலையுச்சியிலிருந்து  மணிமுத்தாறு அணையினையும் கீழுள்ள சமவெளி பகுதிகளும் மனதை கவர்ந்தது.

OLYMPUS DIGITAL CAMERA         குதிரைவெட்டியிலிருந்து மணிமுத்தாறு அணையின் தோற்றம்

அடுத்தநாள்  காலையில் நலுமுக்கின் அருகிலிருக்கும் கோதையாறு அணையினை காணச் சென்றோம், கோதையாறு மேலணை கீழணை என இரண்டு அணைகள் மனதைகவர்ந்தன, இங்கு மின்சரவரியத்திற்கு சொந்தமான தாங்கும் விடுதியுள்ளது.

கோதையாறு அணை

மொத்தத்தில் இந்தப் பயணம் சென்னை போன்ற இயந்திர வாழ்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இனிய அனுபவமாக இருந்தது, பெரும்பாலான இடங்களில் செல்போன் டவர் கிடைக்க வில்லை எனவே செல்போன் தொல்லையிலிருந்தும் மீண்டு முழுமையான புத்துணர்வை அனுபவித்த எனது பயண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதிலே மிகுந்த மகிழ்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக