நம்ம தமிழகத்தில் திரை நட்சதிரங்களின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பிம்பங்கள் அல்லது உச்ச திரை நட்சத்திரங்கள் தங்களின் படம் ஓடுவதற்காக தாங்களாகவே உருவாக்கி கொண்ட பிம்பங்கள் போன்றவற்றை உடைத்து திரை நட்சத்திரங்களும் நம்மை போன்றே காதல், பாசம், காமம், வன்மம், துரோகம் போன்ற எல்லாமும் அவர்களுக்கும் இருக்கிறதென்று நகைச்சுவையுடனும் மனதைப் பிழியும் காட்சிகளுடனும் வெளிவந்திருகிறது கமலின் இந்த உத்தம வில்லன்!
கதை சுறுக்கம்:
உச்ச திரை நட்சத்திரமாக மின்னிகொண்டிருக்கும் ஒரு பெரிய கதாநாயகன் தனது ஆயுள் இன்னும் சில நாட்களே எனத் தெரிந்து கொள்ளும் போது தன்னை அறிமுகப் படுத்தி தனது உயர்வுக்கு ஏணியாக இருந்த இயக்குனரிடம் இணைந்து ஒரு நல்ல தனது மனதிற்கு பிடித்த திரைப் படத்தை தந்து விட்டு இறக்க ஆசைப் படுகிறார். அவரின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே உத்தம வில்லனின் கதை.
படத்தில் என்னைக் கவர்ந்தவை:
2. கமலிற்கும் அவரது மேனேஜர் M S பாஸ்கர் இடையே வரும் கடிதக் காட்சியும் மனதை தொடும் ரகம்.
3. கமலிற்கும் அவரது மகனிற்கும் இடையில் நடக்கும் உரையாடல் மனதைப் பிழியும் ரகம்.
படத்தின் குறைகள்:
உத்தம வில்லன் போன்ற கதையினை யோசிக்கவும், எழுதவும், நடிக்கவும் முடிந்த ஒரே நடிகர் கமல் மட்டுமே! சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போடும் இளம் நடிகர்கள் ஏன் கமல் இடத்திற்கு ஆசைப் படவே முடியாது என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக இந்தப் படம் அமைந்துள்ளது
மொத்தத்தில் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான மனதை தொட்ட ஒரு திரைப் படம்.
அன்பேசிவம் போன்ற திரைப் படம் வெளியான வேளையிலே அதை வெற்றியடைய செய்யாமல் தற்போது அந்தப் படத்தை டீவியில் கண்டு மனதராப் பாராட்டும் இனிய தமிழ் திரை ரசிகப் பெருமக்களே உத்தம வில்லன் படத்தை வெண் திரையில் கண்டு வெற்றிபெற செய்து இதனைப் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைபடங்கள் வெளிவர செய்யுங்கள் !

- ரொம்ப சோகமான கதை கொண்ட திரைபடத்தில் கதைக்குள் கதை சொல்லும் திரைக் கதை உத்தி மூலம் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த திரைப்படமாக தந்த விதம்.
- கமல், நாசர் , ஊர்வசி, ஆன்ட்ரியா, பார்வதி, M S பாஸ்கர் போன்றோரின் அருமையான நடிப்பு. கார் டிரைவர் உட்பட படத்தின் பெரும்பாண்மையான கதா பாத்திரங்கள் ரொம்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.
- மனதிப் பிழியும் காட்சிகள் :
2. கமலிற்கும் அவரது மேனேஜர் M S பாஸ்கர் இடையே வரும் கடிதக் காட்சியும் மனதை தொடும் ரகம்.
3. கமலிற்கும் அவரது மகனிற்கும் இடையில் நடக்கும் உரையாடல் மனதைப் பிழியும் ரகம்.
படத்தின் குறைகள்:
- அங்காங்கே மெதுவாக செல்லும் திரைக்கதை
உத்தம வில்லன் போன்ற கதையினை யோசிக்கவும், எழுதவும், நடிக்கவும் முடிந்த ஒரே நடிகர் கமல் மட்டுமே! சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போடும் இளம் நடிகர்கள் ஏன் கமல் இடத்திற்கு ஆசைப் படவே முடியாது என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக இந்தப் படம் அமைந்துள்ளது
மொத்தத்தில் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான மனதை தொட்ட ஒரு திரைப் படம்.
அன்பேசிவம் போன்ற திரைப் படம் வெளியான வேளையிலே அதை வெற்றியடைய செய்யாமல் தற்போது அந்தப் படத்தை டீவியில் கண்டு மனதராப் பாராட்டும் இனிய தமிழ் திரை ரசிகப் பெருமக்களே உத்தம வில்லன் படத்தை வெண் திரையில் கண்டு வெற்றிபெற செய்து இதனைப் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைபடங்கள் வெளிவர செய்யுங்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக