இந்த வலைப்பதிவில் தேடு

ennai arinthal movie review லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ennai arinthal movie review லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தூங்கா நகரில் என்னை அறிந்தால் திரைப்பட அனுபவம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தல படம் பார்க்க தங்க ரீகல் தியேட்டர் போனேன் 150 ரூபாய்  டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால்  ஸ்க்ரீன்ல இருந்து ரெண்டாவது ரோ  சீட் , ஒடனே நம்ம கேபிள்ஜி சொன்ன கேட்டால் கிடைக்கும் நாபகம் வர தியேட்டர் காரங்களோட சண்ட போட்டு பிண்ணாடி சீட் வாங்கி செட்டில் ஆனேன் .

கௌதம் மேணன் இதுவரை எடுத்துள்ள படங்களை இரு வகைப் படுத்தலாம்
 1. காதல் 
2. நேர்மையான போலிசின் காதல் கலந்த த்ரில்லர் படம் .
இது ரெண்டாவது வகை 




கதை சுருக்கம் 

தனது அப்பா கொலைக்கு காரணமான ரவுடிகள் குலத்தையே அழித்தே தீரணும்னு  நேர்மையான போலீசா ஆகும் சத்யதேவ் அதை ஒரு ரவுடி கும்பல்ல விக்டரின்  உதவியுடன் சேர்ந்து அந்த கும்பல அளிச்சிடுறாரு , ஆனா விக்டர   மட்டும் புத்தி சொல்லி கொல்லாமா விட்டுறாரு , மேலும் தனது ரவுடி வேட்டைய தொடர்ந்து விளையாடுறார் , இதற்கிடையில் விவாகரத்தாகி ஒரு குழந்தையுடன் இருக்கும் பெண்ணோட காதல் கல்யாணம் வரைக்கும் போகி , விக்டறால த்ரிஷா கொல்லப்பட தனது பொண்ணு நல்வாழ்வுக்காக போலீஸ் வேலைய விட்டு ஒதுக்கி வாழும்போது மீண்டும் விக்டர் குறிக்கிட அவன எப்படி பலி வாங்குறாரு அப்படிங்கிறத வெண்திரையில் காண்க .

படத்தில் என்னை கவர்ந்தவை 

ஆர்ப்பட்டமில்லாத அஜித்தின் நடிப்பு (இதனைப் போன்ற கிளாஸ் படத்தை ஒத்துகிட்டு நடிச்சதே பெரிய விஷயம்) 
அசால்டான அருண் விஜய் நடிப்பு (தமிழ் சினிமா இவரைப் போன்ற நல்ல நடிகர்களை இன்னும் சரியாகப் பயன் படுத்தவில்லை )
படத்தில் ஒளிப்பதிவு ( வெளிநாட்டு காறராம் கலக்கி இருக்காரு மனுஷன் 
இரண்டு பாடல்கள் - உனக்கென்ன வேணும் சொல்லு மற்றும் என்னை அறிந்தால் 
கௌதமின் அக்மார்க் (TRADE மார்க்) இயக்கம் 
பின்னணி இசை - ஹாரிஸ் கலக்கிடாறு 

படத்தின் குறையாக என்னைக்குப் பட்டது 

முன் பாதியின் நீளம் 
கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட வசனங்கள் 
பின் பாதியில் அங்காங்கே லாஜிக் மிஸ் 
நீளமான கிளைமாக்ஸ் - கொஞ்ச பேரு எந்திருச்சு போயிட்டாங்க.


மொத்தத்தில் முன் பாதி கொஞ்சம் பொறுமய சோதிச்சாலும் , அருமையான இரண்டாம் பாதி மூலம் கௌதம் அட போடா வக்கிறாரு !

(மொபைல டைப் பண்ணதால சுருக்கமான விமர்சனம் அடுத்த வாரம் விரிவா எழுதுறேன் )

புதன், 4 பிப்ரவரி, 2015

என்னை அறிந்தால் - முன்னோட்டம்


பொதுவாக அஜீத் அவர்களுக்கு பாக்ஸ் ஆபீஸ் கிங் என்ற பெயருண்டு ஏனெனில் அவரது படத்திற்கான எதிர்பார்ப்பு எப்பவுமே அதிகம்தான். மேலும்  இப்படத்தில் அவர் கௌதம் போன்ற பெரிய இயக்குனருடன் இணைந்துள்ளது  எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது .

கௌதம் தனது பழைய சகாக்கலான ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆண்டனி மற்றும் தாமரை ஆகியோருடன் இம்முறை களமிறங்கி இருப்பதை பார்க்கும் போது , இம்முறை கண்டிப்பாக வெற்றிப் படத்தை தந்தே தீருவேன் என்று களமிறங்கி இருப்பது நன்றாகவே தெரிகிறது.

கௌதமின் சமிபத்திய பேட்டிகளில் படித்திற்கு பெரிய எதிர்பார்ப்புடன் வரவேண்டாம் என்று கூறி இருக்கிறார், சமீபத்தில் வந்த பெரிய படங்களின் குறையாக படத்தில் நீளம் சுட்டிக்காட்டப் பட்டதையடுத்து , இன்று படத்தின் நீளம் குறைக்கப் பட்டுள்ளதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.



படத்தினுடைய ட்ரைலரும் பாடல்களும் ஏற்கனேவே வெற்றியடைந்துள்ளது கூடுதல் பலம். படத்தின் அட்வான்ஸ் புக்கிங் நிலவரப் படி சென்னையின் பெரும்பான்மையான திரைஅரங்குகளில் இருக்கைகள் முழுவதும் முன்பதிவு செய்யப் பட்டுவிட்டது இந்த படத்தின் பெரிய எதிர்பார்பிற்கான சாட்சியாக உள்ளது. 

படம் வெற்றியடைய வாழ்த்துவோம்!

படத்தின் ட்ரைலரை கண்டுகளிக்க