உலக வல்லரசுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இந்திய மக்கள் நிலையான அரசினை தேர்வு செய்து சரியான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
உலக பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பினை உண்டாக்கி வரும் இச்சூழலில் நிலையான ஒரு அரசு நமக்கு கண்டிப்பாக தேவை.
பாஜகவின் பரிதாப நிலை
வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் பிரதம வேட்பாளர்களாக இல்லாததும் அத்வானி, மோடி இடையே நடந்த அதிகாரத்திற்கான போட்டி தமிழகம், ஆந்திர போன்ற மாநிலங்களில் சரியான கூட்டணி இல்லாமை போன்றவையே பாஜகவின் தோல்விக்கு காரணங்கள்.
தமிழக மக்களின் சிறந்த தெரிவு
கடந்த முறையை போலவே இம்முறையும் தமிழகம், ஆந்திர முடிவுகள் மத்திய அரசினை முடிவு செய்யும் விதமாக இருந்தது மேலும் உபி, கேரளம் மற்றும் மேற்கு வாங்க மாநில முடிவுகள் காங்கிரசை பெரும்பான்மையுடன் அரியணையில் அமர்த்தியுள்ளது.
இலங்கை பிரச்சனை
அதிமுக கூட்டணி இலங்கை பிரச்சனையை பிரதானமாக கையாண்டது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்கள் பற்றி இம்மியளவும் எண்ணிப்பார்க்காத அதிமுக தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க எனக்கு ஓட்டு போடுங்கள் என்றது அவர்கள் சிறந்த நடிகை என்பதை மக்களிடம் காட்டியது, யோசித்து பாருங்கள் வலையுலக நண்பர்களே வைகோ எதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டார்? இலங்கை தமிழர்கள் பற்றி பேசி தானே,ஆக இவர்கள் ஓட்டு வாங்க சொன்ன பொய் அவர்களுக்கே எதிராக முடிந்தது. விலைவாசி உயர்வு, மின்தடை போன்ற முக்கிய பிரச்சனைகளை நாயகர்கள் ஆக்கியிருந்தால் வெற்றி பெற உதவி இருக்கும்.
மண்ணை கவ்விய மதிமுக பாமக
சேது சமுத்திர திட்டத்தினை தமிழகத்திற்கு பெற திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று திமுக அணியிலிருந்து 2004 ஓட்டு கேட்ட வைகோ 2009 தேர்தலில் சேது சமுத்திர திட்டத்தினை செய்யல்படுத்தாது தடுக்கும் தலைவியின் பின்னால். சென்ற சட்டமன்ற தேர்தலிலே எடுபடாத குடும்ப அரசியல் என்ற வாதம்,சென்ற சட்டமன்ற தேர்தலிலே பாமகவைவிட குறைந்த இடங்களே தந்ததால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய வைகோ இம்முறை தன்மானத்தை தானை தலைவியிடம் அடகு வைத்து விட்டாரா? வைகோவை தோற்கடித்துள்ளனர் தமிழக மக்கள்.
ஒரு சதவிகித வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி பதவி சுகம் கண்டு வந்த நரியின் சாயத்தை வெளுக்க வைத்த தமிழக மக்கள் வாழ்க.இனியாவது திமுக அதிமுக போன்ற கட்சிகள் பாமக போன்றவர்களை புறந்தள்ள வேண்டும்.
வளர்ந்துவரும் தேமுதிக
2004 சட்டமன்ற தேர்தலிலே 8.5% இந்த தேர்தலிலே 10% வாக்குகளை தனித்து நின்று தமிழக நின்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்து வருகிறது தேமுதிக.
மொத்தத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை எங்களின் இதயத்தை துளைத்தாலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இதயம் கனத்தாலும் இந்தியாவிற்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு வக்களித்திட எம் தமிழக மக்கள் சிறந்த மதிநுட்பம் கொண்டோர் என மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர்
பராசக்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக