இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மே, 2009

சிகரம் - பகுதி 1

வெற்றியும் தோல்வியும் வாழ்கையில் இணைபிரியாதவை , இதில் தோல்வி பல மனிதர்களை துவண்டு விழ செய்கின்றது . தொடர் தோல்விதனை எப்படி ஏணிப் படிகளாக்குவது என்பதை தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு சிகரம் தொட்டவர்களைக் கொண்டு விளக்கும் தொடர் இது .
உலக பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில் அனைவர் மனதிலும் நம்பிக்கை எனும் விதையை விதைத்திட ஒரு சிறு முயற்ச்சி,

ஜெ கே ரோவ்லிங்
உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் நூலின் ஆசிரியை ஜெ கே ரோவ்லிங் அவர்களின் சிகரம் தொட்ட கதை .

1993 ஆண்டு டிசம்பர் மாதம் உலகே கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடிய நேரம்
ரோவ்லிங் மட்டும் சோகத்தில் ,சென்ற மாதத்தில்தான் விவாகரதுப்பெற்று தனது மகளுடன் ஸ்காட்லாந்து எடின்பரோ நகரில் தஞ்சமடைந்திருந்தார் ரோவ்லிங்.

தன்னையும் தனது மகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேலைக்கு செல்ல வேண்டிய கட்டயத்திலே ரோவ்லிங், தனக்கு தெரிந்த அச்சிரியப்பணிக்கு செல்ல கூட கல்விச்சான்றிதல் இல்லை எதிர்காலம் கேள்விக்குறியாக ரோவ்லிங் முன்பு நின்றது. இந்த சோதனையை சாதனையாக்க அவரிடம் இருந்தது அவருடைய சிந்தனை , ஆம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தனது மனக்கண்ணில் கண்ட ஹாரி பாட்டர் கதையின் துவக்கமாக ஆனது.

தனது சிறுகுழந்தையை பூங்காவிற்கு அழைத்து சென்று தூங்கவைத்து தனது புத்தகத்திற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் ரோவ்லிங் நோட்டில் எழுதிய கதைக்கு தனது வீட்டில் இருந்த பழைய டைப் ரைட்டிங் மெஷின் மூலம் எழுத்து வடிவம் கொடுத்தார் , அருகில் இருந்த கல்லூரியின் உதவியால் முழூ வடிவம் பெற்றது ஹாரி பாட்டர் முதலாம் பாகம் . இப்போது புத்தகத்தை விற்க வேண்டிய சோதனை ரோவ்லிங் முன்னால் . தனது தொடர் உழைப்பினால் 1 ஆண்டிற்கு பிறகு Bloomsbury என்ற நிறுவனம் சுமார் $4,000 விலைக்கு அந்த புத்தகத்தை வாங்கியது . அந்த புத்தகம் மக்கள் மத்தியிலே சிறுக சிறுக பிரபலம் அடைந்தது .

பள்ளியில் ஆசிரியப்பணி செய்து கொண்டே அடுத்த பாகத்தை ( Harry Potter and the Chamber of Secrets) , எழுதினார் இந்தப்புத்தகம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பெரிய வரவேற்ப்பை பெற்று ஜெ கே ரோவ்லிங் உலகப் புகழ் பெற அடிகோலியது .

ஹாரி பாட்டர் தொடரின் நான்காம் பாகம் (HarryPotter and the Goblet of Fire) வரலாற்றில் மிக விரைவில் விற்று தீர்ந்தது . இப்புத்தகம் முதல் பதிப்பில் சுமார் 5.3 மில்லியன் வெளியானது , மேலும் சுமார் 1.8 மில்லியன் பிரதிகள் முன்பதிவு செய்யபட்டிருந்தது . அடுத்தடுத்து வந்த எல்லா பாகங்களும் முந்தைய சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்தது .

2006 ஆண்டு இறுதியிலே ஹாரி பாட்டர் தொடரின் 6 பாகங்கள் சுமார் 90 மில்லியன் பிரதிகள் விற்று தீர்ந்து உலக பெரும் பணக்காரர்களின் வரிசையில் ஜெ கே ரோவ்லிங்கை இடம் பெற செய்தது .

தனது சோகங்களை சாதிப்பதற்கு உரமாக்கிய இம்மங்கையின் மன உறுதி நமக்குமிருந்தால் சிகரம் கூட தொட்டுவிடும் தூரத்திலே !.

1 கருத்து:

  1. \\You Are Posting Really Great Articles... Keep It Up...

    We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

    www.Tamilers.com
    தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

    நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\\

    நன்றி தமிழர்ஸ்

    பதிலளிநீக்கு