இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தூங்கா நகரில் என்னை அறிந்தால் திரைப்பட அனுபவம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தல படம் பார்க்க தங்க ரீகல் தியேட்டர் போனேன் 150 ரூபாய்  டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால்  ஸ்க்ரீன்ல இருந்து ரெண்டாவது ரோ  சீட் , ஒடனே நம்ம கேபிள்ஜி சொன்ன கேட்டால் கிடைக்கும் நாபகம் வர தியேட்டர் காரங்களோட சண்ட போட்டு பிண்ணாடி சீட் வாங்கி செட்டில் ஆனேன் .

கௌதம் மேணன் இதுவரை எடுத்துள்ள படங்களை இரு வகைப் படுத்தலாம்
 1. காதல் 
2. நேர்மையான போலிசின் காதல் கலந்த த்ரில்லர் படம் .
இது ரெண்டாவது வகை 




கதை சுருக்கம் 

தனது அப்பா கொலைக்கு காரணமான ரவுடிகள் குலத்தையே அழித்தே தீரணும்னு  நேர்மையான போலீசா ஆகும் சத்யதேவ் அதை ஒரு ரவுடி கும்பல்ல விக்டரின்  உதவியுடன் சேர்ந்து அந்த கும்பல அளிச்சிடுறாரு , ஆனா விக்டர   மட்டும் புத்தி சொல்லி கொல்லாமா விட்டுறாரு , மேலும் தனது ரவுடி வேட்டைய தொடர்ந்து விளையாடுறார் , இதற்கிடையில் விவாகரத்தாகி ஒரு குழந்தையுடன் இருக்கும் பெண்ணோட காதல் கல்யாணம் வரைக்கும் போகி , விக்டறால த்ரிஷா கொல்லப்பட தனது பொண்ணு நல்வாழ்வுக்காக போலீஸ் வேலைய விட்டு ஒதுக்கி வாழும்போது மீண்டும் விக்டர் குறிக்கிட அவன எப்படி பலி வாங்குறாரு அப்படிங்கிறத வெண்திரையில் காண்க .

படத்தில் என்னை கவர்ந்தவை 

ஆர்ப்பட்டமில்லாத அஜித்தின் நடிப்பு (இதனைப் போன்ற கிளாஸ் படத்தை ஒத்துகிட்டு நடிச்சதே பெரிய விஷயம்) 
அசால்டான அருண் விஜய் நடிப்பு (தமிழ் சினிமா இவரைப் போன்ற நல்ல நடிகர்களை இன்னும் சரியாகப் பயன் படுத்தவில்லை )
படத்தில் ஒளிப்பதிவு ( வெளிநாட்டு காறராம் கலக்கி இருக்காரு மனுஷன் 
இரண்டு பாடல்கள் - உனக்கென்ன வேணும் சொல்லு மற்றும் என்னை அறிந்தால் 
கௌதமின் அக்மார்க் (TRADE மார்க்) இயக்கம் 
பின்னணி இசை - ஹாரிஸ் கலக்கிடாறு 

படத்தின் குறையாக என்னைக்குப் பட்டது 

முன் பாதியின் நீளம் 
கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட வசனங்கள் 
பின் பாதியில் அங்காங்கே லாஜிக் மிஸ் 
நீளமான கிளைமாக்ஸ் - கொஞ்ச பேரு எந்திருச்சு போயிட்டாங்க.


மொத்தத்தில் முன் பாதி கொஞ்சம் பொறுமய சோதிச்சாலும் , அருமையான இரண்டாம் பாதி மூலம் கௌதம் அட போடா வக்கிறாரு !

(மொபைல டைப் பண்ணதால சுருக்கமான விமர்சனம் அடுத்த வாரம் விரிவா எழுதுறேன் )

4 கருத்துகள்:

  1. அருமையான படம் போல பார்க்கத்தூண்டும் விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  2. கௌதம் வாசுதேவனின் இயக்கம் சற்று நீளமான படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும். இருந்தாலும் படத்தின் நகர்வு இலக்கிய தரமாக இருக்கும். தங்களின் கருத்துப்படி படம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    எங்கள் ஊரில் வந்து படம் பார்த்த உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னது சரிதான் . தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நானும் மதுரைக்காரன் தான் நண்பரே . மதுரை விடுமுறைக்கு வரும்போதெல்லாம் பொதுவாக படத்திற்கு செல்வதில்லை .

      நீக்கு