இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஜூன், 2009

களிமண் தரை மன்னன் முடியிழந்தார் - பிரெஞ்சு ஓபன்



பிரெஞ்சு ஓபெனில் தான் விளையாடத்துவங்கிய 2005 முதல் சென்ற ஆண்டு வரை
முடி சூடா மன்னனாக விளங்கிய நடால் நேற்று நடை பெற்ற 2009 பிரெஞ்சு ஓபெனில் நான்காவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் பட்டம் வென்று தொடர்ந்து அயிந்தாவது முறையாக வென்று சாதனை புரிவார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி தனது 32 தொடர் வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடால். (நம்ம தேர்தல் முடிவு போலவே ஆயிடுச்சு)

இந்த தோல்வியின் மூலம் ரோஜர் பெடரர் 14 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. பெடரர் இந்த ஆண்டு பட்டம் வென்றால் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 6 வது வீரர் என்ற சாதனை படைப்பார். இச்சாதனை புரிய பெடரரை வாழ்த்துவோம்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடால் " இந்த தோல்வி சோகமானதல்ல, என்றாவது ஒரு நாள் தோல்வியை சந்திக்க நேரிடும், தொடர் வெற்றிகளை பெறும்போது எப்படி அமைதியாக ஏற்றுக்கொண்டேனோ அதைப்போல இந்த தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென" தெரிவித்தார். நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக