இந்த வலைப்பதிவில் தேடு

விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

6-0 சாதனையை தக்க வைத்த இந்தியா!



உலகக் கோப்பை கிரிக்கெட்டில்  பாக்கிற்கு எதிராக  இது வரையில் தோர்தது இல்லை என்ற சாதனையை மீண்டும் ஒரு முறை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்திய அணி . 



கடந்த 4 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய அணி பெற்றுள்ள (பயிற்சி ஆட்டம் தவிர்த்து ) முதல் வெற்றி இது! உண்மைய சொல்லனுனா நேத்து வரைக்கும் இந்தியா பாக்கிற்கு எதிராக வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது . ஆனால் இன்று ஆட்டத்தின் டாஸ் முதல் கடைசி வரை அசத்தலாக ஆடி அசத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி .

இந்தியா கடந்த 6 முறை பாக்கிற்கு எதிராக பெற்றுள்ள போட்டிகளின் சுருக்கத்தை பின்வரும் படத்தில் காணாலாம் .




 நல்லதொரு துவக்கம் 

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றியுடன் துவக்கி உள்ளதன் மூலம் 2015  உலகக் கோப்பையில்  நல்லதொரு துவக்கமாக அமைந்துள்ளது. 

இந்தப் போட்டியின் சுப்பர் அம்சங்கள் 

  • விராட் கோஹ்லி சதமடித்து மீண்டும் நல்ல பார்மிற்கு திரும்பிருப்பது நமது இந்திய அணிக்கு அணி வரும் போட்டிகளில் புது தெம்பைக் கண்டிப்பாக தரும்.
  • கடந்த பல மாதங்களாக சொதப்பி வந்த ஷிகர் தவான் மீண்டும் தனது அதிரடி ஆட்டப் பாணிக்கு திரும்பயுள்ளது இன்னொரு சாதகமான அம்சம் 
  • சுரேஷ் ரைனா இதுவரை ஆஸ்திரேலியா போன்ற வேகப் பந்திற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்போதுமே சொதப்புவார் என்ற தனக்கு எதிரான குற்றசாட்டிற்கு தனது பொறுப்பான வேகமான ஆட்டத்தின் மூலம் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் .
  • நம்ம ஊரு அஷ்வின் இன்றையப் போட்டியில் 3 மெய்டன் ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை எடுத்து அசத்தி அணிக்கு மேலும் பலம் சேர்த்தார்.

இன்றைய போட்டியின் சொதப்பல்கள் 

  • இந்தியா பேட்டிங்கின் போது கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கோட்டை விட்டது 
  • நமது கேப்டன் தோணி இன்னும் பார்மிற்கு ஏமாற்றமே 
மேலும் பல வெற்றி பெற்று உலகக் கோப்பையை தக்க வைக்க இந்திய அணியினை வாழ்த்துவோம் !



















திங்கள், 8 ஜூன், 2009

வரலாற்று சாதனை படைத்தார் பெடரர்


13 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர் முதன் முறையாக நேற்று
முதன் முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்று தனது பிரெஞ்சு ஓபன் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 14 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்துள்ளார், சாம்ப்ராஸ் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெடரர் இந்த வெற்றியின் மூலம் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 6 வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடாலிடம் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து வந்த பெடரர் இந்தமுறை தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக திகழும் பெடரரின் இந்த வெற்றி அவரின் காத்திருத்தலுக்கு கிடைத்த வெற்றியாகும் , தன்னைபோன்ற சிறந்த வீரர்களுக்கே பிரெஞ்சு ஓபன் சிறந்த சவாலாக அமைந்தது அனாலும் 4 வருட கடின உழைப்பிருக்கு பிறகு இந்த வெற்றியை பெற்ற பெடரருக்கு வாழ்த்துக்கள்!

திங்கள், 1 ஜூன், 2009

களிமண் தரை மன்னன் முடியிழந்தார் - பிரெஞ்சு ஓபன்



பிரெஞ்சு ஓபெனில் தான் விளையாடத்துவங்கிய 2005 முதல் சென்ற ஆண்டு வரை
முடி சூடா மன்னனாக விளங்கிய நடால் நேற்று நடை பெற்ற 2009 பிரெஞ்சு ஓபெனில் நான்காவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் பட்டம் வென்று தொடர்ந்து அயிந்தாவது முறையாக வென்று சாதனை புரிவார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி தனது 32 தொடர் வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடால். (நம்ம தேர்தல் முடிவு போலவே ஆயிடுச்சு)

இந்த தோல்வியின் மூலம் ரோஜர் பெடரர் 14 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. பெடரர் இந்த ஆண்டு பட்டம் வென்றால் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 6 வது வீரர் என்ற சாதனை படைப்பார். இச்சாதனை புரிய பெடரரை வாழ்த்துவோம்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடால் " இந்த தோல்வி சோகமானதல்ல, என்றாவது ஒரு நாள் தோல்வியை சந்திக்க நேரிடும், தொடர் வெற்றிகளை பெறும்போது எப்படி அமைதியாக ஏற்றுக்கொண்டேனோ அதைப்போல இந்த தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென" தெரிவித்தார். நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிது.