இந்த வலைப்பதிவில் தேடு

பராசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பராசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

6-0 சாதனையை தக்க வைத்த இந்தியா!



உலகக் கோப்பை கிரிக்கெட்டில்  பாக்கிற்கு எதிராக  இது வரையில் தோர்தது இல்லை என்ற சாதனையை மீண்டும் ஒரு முறை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்திய அணி . 



கடந்த 4 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய அணி பெற்றுள்ள (பயிற்சி ஆட்டம் தவிர்த்து ) முதல் வெற்றி இது! உண்மைய சொல்லனுனா நேத்து வரைக்கும் இந்தியா பாக்கிற்கு எதிராக வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது . ஆனால் இன்று ஆட்டத்தின் டாஸ் முதல் கடைசி வரை அசத்தலாக ஆடி அசத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி .

இந்தியா கடந்த 6 முறை பாக்கிற்கு எதிராக பெற்றுள்ள போட்டிகளின் சுருக்கத்தை பின்வரும் படத்தில் காணாலாம் .




 நல்லதொரு துவக்கம் 

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றியுடன் துவக்கி உள்ளதன் மூலம் 2015  உலகக் கோப்பையில்  நல்லதொரு துவக்கமாக அமைந்துள்ளது. 

இந்தப் போட்டியின் சுப்பர் அம்சங்கள் 

  • விராட் கோஹ்லி சதமடித்து மீண்டும் நல்ல பார்மிற்கு திரும்பிருப்பது நமது இந்திய அணிக்கு அணி வரும் போட்டிகளில் புது தெம்பைக் கண்டிப்பாக தரும்.
  • கடந்த பல மாதங்களாக சொதப்பி வந்த ஷிகர் தவான் மீண்டும் தனது அதிரடி ஆட்டப் பாணிக்கு திரும்பயுள்ளது இன்னொரு சாதகமான அம்சம் 
  • சுரேஷ் ரைனா இதுவரை ஆஸ்திரேலியா போன்ற வேகப் பந்திற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்போதுமே சொதப்புவார் என்ற தனக்கு எதிரான குற்றசாட்டிற்கு தனது பொறுப்பான வேகமான ஆட்டத்தின் மூலம் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் .
  • நம்ம ஊரு அஷ்வின் இன்றையப் போட்டியில் 3 மெய்டன் ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை எடுத்து அசத்தி அணிக்கு மேலும் பலம் சேர்த்தார்.

இன்றைய போட்டியின் சொதப்பல்கள் 

  • இந்தியா பேட்டிங்கின் போது கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கோட்டை விட்டது 
  • நமது கேப்டன் தோணி இன்னும் பார்மிற்கு ஏமாற்றமே 
மேலும் பல வெற்றி பெற்று உலகக் கோப்பையை தக்க வைக்க இந்திய அணியினை வாழ்த்துவோம் !



















திங்கள், 2 பிப்ரவரி, 2015

இசை - போட்டி பொறாமையின் உச்சம்

கதை சுருக்கம் 

 படத்தில் துவக்கத்திலே S J சூர்யா தனது கரகரப்பான குரலில் கதை சுருக்கத்தை சொல்லி விடுகிறார் .
"இசை சாம்ராஜ்யத்தை 30 வருடங்கள் கட்டியாண்ட வெற்றிசெல்வன் எனும் இசையமைப்பாளரின் இடத்தை புதிதாக வந்த அவருடைய உதவியாளர்  A K  சிவா 3 வருடங்களில் தட்டிப் பறித்துவிட , தான் இழந்த இசை சாம்ராஜியத்தை  மீண்டும் பெற தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறார் வெற்றிசெல்வன் அதனால் ஏற்படும் விளைவுகளே இந்த இசை. "

 படத்தின் 1 லைன் 

இதையும் அவரே மீண்டும் தனது கரகரப்பான குரலில் கூறி விடுகிறார் . "what Jealousy can do it to the genius" (பொறாமை மேதவியை என்ன செய்துவிடும் )

மேலே சொன்ன கதை சுருக்கத்தை சொன்னதும்  இந்த கதை எந்த இருவரைப் பற்றியது என்ற ஒரு எண்ணம் உங்களைப் போலவே எனக்கும் ஏற்பட்டது , ஆனால் முழுக்க முழுக்க கற்பனை கதையே என்று  S J சூர்யா சொல்லிடுறார் நாமளும் நம்பிடுவோம். 

நம்ம ஊர்ல சாதிச் சண்டைகளைவிட பொறமை போட்டி சண்டைகளில் பாதிக்கப் பட்டவர்களே அதிகம், அதை போல இப்படமும் பொறாமையின் பழிவாங்கலை காதல் கலந்து ஆங்காங்கே  கமெடி கலந்து  தந்திருக்கிறார் S J சூர்யா. 


படத்தில் என்னை கவர்ந்தவை 

படத்தின் அடிநாதமான இசையை நன்றாகவே தந்திருக்கிறார் S J சூர்யா.

முதல் பாதியில் வரும் திருநெல்வேலி locations அருமை 

S J சூர்யாவின் நடிப்பு இந்த படத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. 

சத்யராஜின் அலட்டல் நடிப்பு கூடுதல் பலம் 

பெரும்பாலும் இரு துருவங்கள் மோதிக் கொள்ளும் படங்களில் கதாநாயகன் பெரிய புத்திசாலி தனத்துடன் எதிரியை வீழ்த்தும் விதமான கட்சியமைபுகளே தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது ஆனால் இத்திரைப்படம் அந்த மரபை உடைத்திருக்கிறது.

புதுமுக நாயகி முற் பாதியில் காதலில் உருகும் போதும் பிற்பாதியில் கணவனின் அமைதியற்ற தடுமாற்றத்தைக் கண்டு மருகும் போதும் நன்றாக நடித்திருக்கிறார் . 

படத்தின் குறைகள் 

படத்தினுடைய நீளம் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஓடுகிறது 

S J சூர்யாதனமான விரசமான காட்சிகள் இளைங்கர்களை குறி வைத்து அதிகமாகவே தந்திருக்கிறார் S J சூர்யா.

ஒரு பெரிய சினிமா உலகத்தில் 2 இசையமைப்பாளர்கள் மட்டுமே இருக்குமாறு அமைத்திருக்கிற திரைகதை .


மொத்தத்தில் THE GAME போன்ற வித்தியாசமான ஆங்கில திரில்லர் திரைப் படங்களை ரசிப்பவரா நீங்கள் அப்போ கண்டிப்பா ஒங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் .

















ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஐ - சூப்பரா சொதப்பலா - விஜய் டிவி நீயா நானா விவாதம்

ஐ - சூப்பரா சொதப்பலா - விஜய் டிவி நீயா நானா கற்பனை  விவாதம் 

Disclaimer 

இந்த பதிவு ஒரு கற்பனையான முயற்சி மட்டுமே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப் பட்டதல்ல.

கோபிநாத் அவர்கள் வழக்கம் போல நிகழ்ச்சியை ஆரம்பித்தார் , ஆச்சி மசாலா வழங்கும் நீயா நானா ! நிகழ்ச்சியின் இந்த வார விவாதம் ,ஐ - சூப்பரா சொதப்பலா , இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐ படத்தின் இயக்குனர் சங்கர் அவர்களே வந்துள்ளார் அவரை வரவேற்று விவாதத்தை துவக்கலாம் வாருங்கள்.  


முதல்ல சொதப்பலேனு சொல்ற இந்தப் பக்கம் சொல்லுங்க படத்துல என்ன சொதப்பல கண்டீங்க ? உடனே நான் மைக்கை வாங்கி படத்தோட திரைக்கதேயே பெரிய சொதப்பல்தான் அப்படினு சொன்னதும் சங்கர் சார் ரொம்ப கோபமாகி திரைக்கதைனா என்னானு தெரியுமா ஒனக்கு . ஏதோ  இலவசமா ப்ளாக் கிடைகிறதால விமர்சனம் என்கிற பேர்ல  எதைப் பத்தியும் தெரியாம கண்டதையும் எழுதீரிங்க , வந்து ஒரு நாள் சூட்டிங் பாருங்க எங்களோட வலி என்னான்னு ஒங்களுக்கு தெரியும் அப்படினு சொல்லிட்டு மேலும்  தொடர்ந்தார், என்னோட திரைகதை சொதபல்னா நீ இயக்குனரா இருந்தா படத்தோட திரைக்கதையை எப்படி வச்சிருப்பனு   சொல்லு பாக்கலாம் அப்படின்னு முதல்வன் பட பாணியில் சவால் விட்டார்.

ஐ எனது கற்பனை  திரைக்கதை  சுருக்கம் 




 தமிழகத்தின் பெரிய மடலான ஹீரோ  விக்ரம்மை     மூணு மாசமா  காணவில்லை மேலும் அவரைப் பற்றிய எந்த தகவலும்  கிடைக்கல, விக்ரமின் வருங்கால காதல் மனைவி ரொம்ப வருத்தத்தோட இருக்குறாங்க அப்ப அங்க எமியோட குடும்ப டாக்டர் பரபரப்பா வந்து   இன்னிக்கி நடந்த ஒரு கார் விபத்தில் ஹீரோ மரண மடைந்த செய்தியை சொல்லுறாரு, அதிர்ச்சியான ஹீரோயின்  மயங்கி விழுந்துர்றாங்க . ஹீரோயின் மயக்கம் தெளிந்து எழும்போது ஹீரோவும் அவங்களும் கல்யாணத்துக்கு அப்புறமா வாழ்றதுக்கு கட்டி வச்ச புது மாளிகைலஅவங்க அம்மா மற்றும் டாக்டரோட  இருங்காங்க , ஹீரோயின் அம்மா ஹீரோவோட இறுதி சடங்கு முடிஞ்சதாகவும் ஹீரோயின் மனதை தேத்திக்க சொல்லி ஆறுதல் சொல்றாங்க ஆனா ஹீரோயினோட மனது மட்டும் இன்னும் ஹீரோ செத்தத நம்ப மறுக்கிறது . ஹீரோயின் ரூமுக்குள் சென்றதும் அவங்க அம்மா டாக்டர்கிட்ட ரொம்ப வருத்தப் படுறாங்க, அந்த டாக்டர் அவங்க கிட்ட கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடுனு ஆறுதல் சொல்லிட்டு போயிடுறாரு.

ஹீரோயினோட மனச மாத்துறதுக்காக ஒரு மனநல மருத்துவர ஹீரோயின் குடும்ப டாக்டர் ஹீரோயின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாரு . மன நல மருத்துவர்கிட்ட தங்களது  காதல் வாழ்க்கைய பிளாஷ் பேக்குல ஹீரோயின் சொல்லுறாங்க இதற்க்கு இடையில் ஹீரோ எதிரிகள் ஒவ்வொருத்தரா கொலை செய்யிராரு .

மனநல மருத்துவரின் கவனிப்பில் ஹீரோயின்   கொஞ்ச கொஞ்சமா நல்ல நிலைக்கு திரும்பிட்டு இருக்காங்க , அப்போ தற்செயலா குடும்ப டாக்டரும் மனநல மருத்துவரும் பேசுவதை தற்செயலா ஹீரோயின் கேட்க நேரிடுது , டாக்டர்கள் பேசுறதில இருந்து ஹீரோ இன்னும் சாகலங்கறதும் மேலும் அவரோட விகார நிலைமைக்கு தனது குடும்ப டாக்டரும் மற்ற 5 பேரும் காரணங்கிரத தெருஞ்சுகிறாங்க . ஒடனே டாக்டர்கிட்ட போயி சண்ட போடுறாங்க அப்பதான் ஹீரோயினுக்கு தெரியுது அவங்க ஹவுஸ் அர்ரெஸ்ட்ல இருக்குறது. 

இதற்கிடையில் ஹீரோ  டாக்டர் தவிர மற்ற வில்லன்களை பழிவாங்கிடுறார். குடும்ப டாக்டர் ஹீரோயின அவங்க அம்மா உயிரோட இருக்கனுனா என்னைய  கல்யாணம் பண்ணனும்னு   மிரட்டிசம்மதிக்க வைக்கிறார் ,ஹீரோ  குடும்ப டாக்டர பழிவாங்க வரும்போது அவர்கிட்ட ஹீரோயின் தான் கிட்ட இருக்குறத சொல்லி ஹீரோவ மிரட்டி சிறைபிடிகிறார். 

 எப்படி தனது காதலிய காப்பாத்தி டாக்டர  பழிவாங்குறார் அப்படிங்கறத கிளைமாக்ஸ்ல காண்பிக்கிறோம் .



தோனியின் தலைமை தள்ளாடுகிறதா ? உலககோப்பை முண்ணோட்டம்


இந்தியாவின் மிகச்சிறந்த  கிரிக்கெட் கேப்டன் தோனியின் கீழ் நமது இந்திய  அணி நிறைய சாதனைகளை புரிந்துள்ளது அச்சாதனைகளின் மணிமகுடமாக 2011 வேர்ல்ட் கப் வென்று சாதித்தது.  இந்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் நமது அணியின் செயல்பாட்டினை உற்று நோக்கினால் எங்களது அணியின் மீது எதிர்பார்ப்பினை வைக்காதீர்கள் என நமது அணி வீரர்கள்  ரசிகர்களாகிய நம்மை தயார் செய்வது போலவே உள்ளது .

சென்ற உலக கோப்பையில் சொல்லியடித்த தோணி 

2011  சொந்த மண்ணில் இந்திய அணி தோணியில் தலைமையில் உலக கோப்பையில் துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் அணியாக வெற்றி வாகை சூடியது அனைவரும் அறிந்ததே!
ஆனால் தற்போது வேகப் பந்து ஆடுகளங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா மற்றும் Newzealand மைதானங்களில் நமது அணியின் வீரர்கள் மீண்டும் வெல்வார்களா என்ற ஐயம் நாம் அனைவருக்கும் துவக்கம் முதலே இருந்தது .
ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் தோணி மற்றும் நமது அணியின் செயல் பாடு நமது எதிர்பார்ப்பினை  விட மோசமாக உள்ளது .

எப்போதும் ஆடுகளத்தினில்  கூலாக செயல்பட்டு கேப்டன் கூல் (captain cool) என்று அழைக்கப்படும் தோனியின் செயல்பாடு நேற்றைய இங்கிலாந்து அணியினருக்கு எதிரான போட்டியில் தனது கோப முகத்தை அவர் வெளிபடுத்திய விதம், நிச்சயம்   நமது அணிக்கு  நல்ல செய்தியல்ல.




துல்லியமாக வீசும் வேகபந்துவீச்சாளர்கள் இல்லை என்ற குறைகளை தோனிக்கு அதரவாக கூறினாலும் , எப்போதுமே நமது அணி பேட்டிங்கை மட்டுமே நம்பியுள்ள அணியாக உள்ளது . ஆனால் தற்போது நமது பேட்டிங்கும் சொதப்புவதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தோனியின் செயல் பாட்டினை பார்க்கும் பொது நமது  தோனி அணித்தேர்வில் தெளிவான முடிவின்றி தடுமாறுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

நமது அணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருவதால் மற்ற அணிகளை விட ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் போதுமான அனுபவத்தை  பெற்றுள்ளது நமது அணிக்கு உலகக் கோப்பை போட்டிகளில் கண்டிப்பாக உதவும்.  மேலும் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் செய்த செய்த தவறுகளை திருத்திக் கொண்டு ஒரு  சாம்பியன் அணியைப் போன்று விளையாடும் என்று நம்புவோம் .

உலக கோப்பை போன்ற அதி முக்கிய போட்டிகளில் தோனியின் செயல்பாடு எப்போதுமே மிகவும் சிறப்பாகவே இருந்துள்ளதை நம்பி நாமும் தோணி தலைமையிலான நமது இந்திய அணியை உலகக் கோப்பையை வென்று வர  வாழ்த்துவோம் !